ஊதிய உயர்வு கேட்டு 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

0பார்த்தது
ஊதிய உயர்வு கேட்டு 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடியில் விவிடி சிக்னல் அருகே நேற்று ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நான்கு ஆண்டுகளாக ஊதிய உயர்வு வழங்காத நிலையில், தற்போது ஊதிய உயர்வை 16 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக குறைத்துள்ளதை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலர் மகாமுனி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாநில பொதுச் செயலர் ராஜேந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு தமிழக அரசின் மறைமுக சம்பள வெட்டு நடவடிக்கைகளைக் கண்டித்து உரையாற்றினார். சங்க உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டு முழக்கமிட்டனர்.

தொடர்புடைய செய்தி