ஸ்ரீவை அணைக்கட்டில் 11ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றம்

0பார்த்தது
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. திருவைகுண்டம் அணைக்கட்டு பகுதியில் இருந்து சுமார் 11 ஆயிரம் கன அடி தண்ணீர் கடலுக்கு வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், ஆற்று கரையோரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும், ஆற்றுப் படுகையில் உள்ள கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ கூடாது என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் எச்சரிக்கை விடுத்துள்ளார். அணைக்கட்டுகள் மற்றும் குளங்களின் நீர்வரத்து நிலவரங்களை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.