கஞ்சா, கொலை வழக்கில் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது!

345பார்த்தது
கஞ்சா, கொலை வழக்கில் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது!
திருநெல்வேலி மாவட்டம் முனைஞ்சிப்பட்டி பகுதியைச் சேர்ந்த ஜேம்ஸ்செல்லதுரை (25), தூத்துக்குடி தெற்கு கோவன்காடு பகுதியைச் சேர்ந்த ராஜேஷ்குமார் (25) மற்றும் தூத்துக்குடி சேர்வைக்காரன்மடம் பகுதியைச் சேர்ந்த பாலமுகேஷ் (20) ஆகிய மூன்று குற்றவாளிகள், கஞ்சா விற்பனை மற்றும் கொலை வழக்குகள் தொடர்பாக குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் இன்று (12.11.2025) தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் உத்தரவின்பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 122 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி