சாத்தான்குளம்: பெண்ணிடம் 9 பவுன் தங்க செயின் பறிப்பு

65பார்த்தது
சாத்தான்குளம்: பெண்ணிடம் 9 பவுன் தங்க செயின் பறிப்பு
சாத்தான்குளம் அருகே பெண்ணிடம் 9 பவுன் தங்க செயினை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வட்டம், கருங்கடல் கிராமம் பனைக்குளம் பகுதியைச் சேர்ந்த ஞானாயுதம் மனைவி பத்மா (58). இவர்  இன்று (மார்ச் 12) மாலை 4 மணியளவில் தனது வீட்டு முன்பு நின்றுகொண்டிருந்தார். 

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த அடையாள தெரியாத 2 நபர்கள் பத்மாவை கீழே தள்ளி அவர் அணிந்திருந்த 9 பவுன் செயினை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுவிட்டனர். இதையடுத்து அங்கிருந்தவர்கள் மேற்படி வாகனத்தை விரட்டிச் சென்றும் பிடிக்க முடியவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக புகாரின் பேரில் சாத்தான்குளம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள்.