சாத்தான்குளம் அருகே இட்டமொழி சாலையில் உள்ள ஒரு பைக் ஷோரூமுக்குள் காட்டுப்பகுதியிலிருந்து மரநாய் ஒன்று நுழைந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், அந்த மரநாயை ஷோரூமிற்கு உள்ளேயே பூட்டிவிட்டு, உடனடியாக காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ராஜமூர்த்தி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், மரநாயை பத்திரமாகப் பிடித்து ஒரு பெட்டியில் அடைத்தனர். பின்னர், அதை அருகிலுள்ள வனப்பகுதியில் பாதுகாப்பாக விடுவித்தனர்.