தூத்துக்குடியில் மது குடித்ததை குடும்பத்தினர் கண்டித்ததால் வாலிபர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். தூத்துக்குடி முள்ளக்காடு நேருஜி நகரைச் சேர்ந்த இசக்கிமுத்து - பேச்சியம்மாள் தம்பதியரின் 4வது மகன் பொன்சிவராஜ் (25) இவர் அங்குள்ள பேக்கரியில் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார்.
இவருக்கு திருமணம் ஆகவில்லை. இந்த நிலையில் கடந்த 8ம் தேதி இவர்கள் புது வீடு கட்டி கிரகப்பிரவேசம் நடத்தியுள்ளனர். அன்றைய தினம் பொன்சிவராஜ் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரை குடும்பத்தினர் கண்டித்தார்கள்.
இதனால் மனவேதனை அடைந்த வாலிபர் தனது படுக்கை அறையில் மின்விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் முத்தையாபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.