தூத்துக்குடியில் 27ம் தேதி பி. எப். குறைதீர்க்கும் கூட்டம்

2பார்த்தது
தூத்துக்குடியில் 27ம் தேதி பி. எப். குறைதீர்க்கும் கூட்டம்
வருங்கால வைப்புநிதி நிறுவனம் மற்றும் தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம் சார்பில், ‘வருங்கால வைப்புநிதி உங்கள் அருகில் 2.0’ என்ற குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 27-ம் தேதி, வியாழக்கிழமை காலை 9 மணிக்கு நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் வருங்கால வைப்புநிதி நிறுவனம், தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம் சார்ந்த உறுப்பினர்கள், ஓய்வூதியம் பெறுவோர், தொழில் அதிபர்கள், அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்கள் மற்றும் தொழில் நிறுவன அமைப்புகள் கலந்து கொண்டு தங்களது குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம் என நெல்லை வருங்கால வைப்புநிதி ஆணையாளர்-1 சிவசண்முகம் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி