சாத்தான்குளம் அருகே, போக்குவரத்துக்கு இடையூறாக மது அருந்தியவர்களை கண்டித்த கப்பல் ஊழியர் ராமராஜனை, 5 பேர் பீர் பாட்டிலால் தாக்கி காயப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக தட்டார்மடம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான 5 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர். காயமடைந்த ராமராஜன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.