கோவில்பட்டி: சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம்; பயிற்சிப்பட்டறை

81பார்த்தது
கோவில்பட்டி: சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம்; பயிற்சிப்பட்டறை
கோவில்பட்டிக் கிளையின் தலைவர் ஆசிரியர் மணிமொழிநங்கை அனைவரையும் வரவேற்றார். 

சாகித்ய அகாடமி பாலபுரஸ்கார் விருதாளர் எழுத்தாளர் உதயசங்கர் இப் பயிலரங்கத்தை துவக்கி வைத்து சிறார் இலக்கியத்தின் தோற்றமும் அதன் வளர்ச்சியையும், குழந்தைகளுக்கு எப்படிப்பட்ட கதைகளை எழுத வேண்டும், எழுதக்கூடிய கதைகளில் எந்தெந்த கருத்துக்கள் இடம்பெற வேண்டும், நவீன சிறார் இலக்கியத்தின் தோற்றத்தில் கவிமணி, பாரதியார் ஆகியோரின் பங்கினையும், அதனைத் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்ற சிறார் கதைகளையும் பட்டியலிட்டு எடுத்துரைத்தார். மேலும் நவீன அறிவியல் மற்றும் உண்மை நிலையினைக் கூறுவதாக சிறார் இலக்கியங்களும், கதைகளும் இருக்க வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டினார். 

மூன்று முதல் எட்டு வயது குழந்தைகளுக்கான கதைகள் 300 வார்த்தைகளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்றும், 8 முதல் 12 வயதுக்குரிய கதைகள் 700 முதல் 800 வார்த்தைகள் உள்ளடக்கியதாகவும், 12 முதல் 18 வயது குழந்தைகளுக்கான கதைகள் 4000 முதல் 5000 வரை உள்ளடக்கிய வார்த்தைகளை கொண்டதாக இருக்க வேண்டும். அறிவுப்பூர்வமான துணிச்சல்கள் கலந்த செயல்பாட்டுக் கருத்துகளைக் கொண்டதாகவும் அமையப் பெற வேண்டும். அதற்கு சிறார் இலக்கியம் தொடர்பான பல கதைப் புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை புதிதாக சிறார் கதை எழுதுபவர்கள் அதிகப்படுத்திக் கொள்ளவேண்டும் என்று எடுத்துக்கூறினார்.

தொடர்புடைய செய்தி