ஸ்ரீவைகுண்டத்தில் தொழிலாளி முத்துவின் வீட்டில், அவர் குடும்பத்துடன் திருமணத்திற்கு சென்றிருந்தபோது, பட்டப்பகலில் கதவை உடைத்து சுமார் ரூ. 1 லட்சம் ரொக்கம் மற்றும் தங்க நகைகள் திருடப்பட்டுள்ளன. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.