கால்நடை மருத்துவ ஆலோசகர் பணிக்கு நேரடி நியமன தேர்வு தகவல்

2பார்த்தது
கால்நடை மருத்துவ ஆலோசகர் பணிக்கு நேரடி நியமன தேர்வு தகவல்
தூத்துக்குடி மாவட்ட ஆவினில் 2 கால்நடை உதவி மருத்துவர் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பால் கொள்முதல் மற்றும் உற்பத்தியை அதிகரிக்க அரசு திட்டங்கள் செயல்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 50 வயதுக்குட்பட்ட, கால்நடை மருத்துவ பட்டதாரிகள், சொந்த வாகனம் வைத்திருப்பவர்கள் 21.11.2025 அன்று காலை 10.30 மணிக்கு தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் நடைபெறும் நேரடி நியமனத் தேர்வில் கலந்துகொள்ளலாம்.

தொடர்புடைய செய்தி