தூத்துக்குடி: மார்ச் 20ல் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

81பார்த்தது
தூத்துக்குடி: மார்ச் 20ல் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 20ஆம் தேதி நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

2025-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்கான ‘விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்” 20. 03. 2025 அன்று காலை 10. 00 மணியளவில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் "முத்து அரங்கத்தில்” வைத்து நடைபெற உள்ளது. எனவே தூத்துக்குடி மாவட்ட விவசாயப் பெருமக்கள் அனைவரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயம் சம்பந்தபட்ட குறைகளைத் தெரிவித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி