தூத்துக்குடி அருகேயுள்ள மேலக்கூட்டுடன்காடு பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன் மனைவி சுப்புலட்சுமி. இவர் பேரூரணி காவலர் பயிற்சி பள்ளியில் தலைமைக் காவலர் மற்றும் உதவிக் காவல் போதகராக பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் மாரியப்பன் சிஆர்பிஎப்-ல் பணிபுரிந்து வருகிறார். தற்போது அவர் விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார்.
இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் நேற்று குடும்பத் தகராறில் அவரது கணவர் அவரை அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனையில் சுப்புலட்சுமி தனது படுக்கை அறைக்குச் சென்று தூக்குப் போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதைப் பார்த்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு தூத்துக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் விசாரித்து வருகின்றனர்.