வெள்ளத்தில் சிக்கிய 27 ஆடுகளை படகில் மீட்ட தீயணைப்புத்துறை

1பார்த்தது
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அணைக்கு கீழ் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக, சிவராமங்கலம் பகுதியில் மேய்ச்சலுக்குச் சென்ற 27 ஆடுகள் வெள்ளத்தில் சிக்கின. தகவலறிந்து, நிலைய அலுவலர் முத்து தலைமையிலான தீயணைப்புத் துறையினர் உடனடியாக படகுடன் விரைந்து, அனைத்து ஆடுகளையும் பத்திரமாக மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். தீயணைப்புத் துறையினரின் விரைவான செயல்பாட்டிற்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி