கொலை வழக்கில் கைதான 2பேர் மீது குண்டாஸ்

1பார்த்தது
கொலை வழக்கில் கைதான 2பேர் மீது குண்டாஸ்
தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 10.10.2025 அன்று நடந்த கொலை வழக்கில் தொடர்புடைய திருச்செந்தூர் லட்சுமிபுரத்தைச் சேர்ந்த கார்த்திக் (26) மற்றும் சாத்தான்குளம் நடுவக்குறிச்சியைச் சேர்ந்த ஆறுமுகம் (51) ஆகிய இருவரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் கே. இளம்பகவத் உத்தரவின்படி மெஞ்ஞானபுரம் காவல் நிலைய போலீசார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி