தூத்துக்குடி மாவட்டம், மேலவாகைகுளம், ஸ்ரீவைகுண்டம் கால்வாய் மற்றும் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதிகளைச் சேர்ந்த ஆறுமுகநைனார் (23), சுடலைகண்ணு (24), இசக்கிபாண்டி (23) ஆகிய மூன்று பேர், கடந்த 9.10.2025 அன்று தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் ஆவர். மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் பரிந்துரையின்படியும், மாவட்ட கலெக்டர் இளம்பகவத் உத்தரவின் பேரிலும், இன்று (7.11.2025) புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் அவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 119 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.