தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை முயற்சி வழக்குகள் உட்பட 3 வழக்குகளில் தொடர்புடைய கலியாவூர் முத்து கல்யாணி (24), அழகேசபுரம் கண்ணபெருமாள் (26), ஆறுமுகமங்கலம் முருகன் (43) ஆகிய மூவர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பரிந்துரையின்படி, மாவட்ட ஆட்சித் தலைவர் இளம்பகவத் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த ஆண்டு இதுவரை 134 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.