டெல்லியில் நேற்று மாலை காரில் ஏற்பட்ட குண்டு வெடிப்பு சம்பவத்தில் 14 பேர் உயிரிழந்தனர், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்கள் மற்றும் விமான நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தூத்துக்குடி விமான நிலையத்திலும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகள் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.