தூத்துக்குடியில் முன்னாள் முதல்வர் எம். ஜி. ஆரின் நினைவு நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். மறைந்த தமிழக முதல்வரும் அதிமுக நிறுவனருமான புரட்சித் தலைவர் பாரத ரத்னா எம். ஜி. ஆரின் 37வது ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.
இதனை முன்னிட்டு தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ். பி. சண்முகநாதன் தலைமையில் மாவட்ட அதிமுக அலுவலகம் முன்பு திருவுருவப்படத்திற்கும், பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள திருவுருவச் சிலைக்கும் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்வில் அதிமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.