தூத்துக்குடி மாவட்டம் உமரிக்காடு அதிமுக முன்னாள் பஞ்சாயத்து தலைவர் மற்றும் திருவைகுண்டம் அதிமுக கிழக்கு ஒன்றிய இளைஞரணி செயலாளரான ராஜேஸ்குமார், தனது நான்கு சக்கர வாகனத்தின் நட்டுகளை கழற்றி விபத்து ஏற்படுத்தி கொலை செய்ய முயன்றதாக மர்ம நபர்கள் மீது குற்றம்சாட்டியுள்ளார். இதற்கு முன்பும் தனது இருசக்கர வாகனம் மற்றும் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் சேதப்படுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தன்னை அரசியலில் வளர்வதை தடுக்க சிலர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாக கூறிய ராஜேஸ்குமார், காவல்துறை நடவடிக்கை எடுக்காததால் மாவட்ட ஆட்சியரிடம் பாதுகாப்பு கோரி மனு அளித்துள்ளார்.