தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் முத்துநகர் திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம் அழகப்பா கல்வி மையத்தின் மாடியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் நிர்வாக சீரமைப்பு குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது.
இதில் தலைவர் முருகேசன், பொருளாளர் ஜாகிர் உசேன், கௌரவ ஆலோசகர்கள் புலவர் சு. முத்துசாமி, து. பத்மநாதன், துணைத் தலைவர் ப. சக்திவேல், துணைச் செயலாளர்கள் மாரிமுத்து மற்றும் டேனியல், செயற்குழு உறுப்பினர்கள் சீலன், மஜித், செய்யது அபுதாஹிர், டாக்டர் வி.பி.எம், மைக்கேல் ஜெரோம், நல்லசிவம், முனீஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.