தூத்துக்குடி விமான நிலைய இயக்குனராக பணியாற்றி வந்த ராஜேஷ் பணி இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்குப் பதிலாக மைசூரு விமான நிலைய இயக்குனராக இருந்த ஜே. ஆர். அனூப் புதிய இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். அனூப் தற்போது தூத்துக்குடி விமான நிலையத்துக்கு வந்து பொறுப்பேற்றுக் கொண்டார். அவரை விமான நிலைய ஊழியர்கள், அதிகாரிகள் வரவேற்றனர். அனூப் 2008-ல் இந்திய விமான ஆணையத்தில் பணியில் சேர்ந்து, கோவா, கோழிக்கோடு, ஜம்மு-காஷ்மீர், திருவனந்தபுரம் விமான நிலையங்களிலும், புதுடெல்லி தலைமை அலுவலகத்திலும் பணியாற்றியுள்ளார். மைசூரு விமான நிலைய இயக்குனராக பணியாற்றிய அனுபவத்துடன் தற்போது தூத்துக்குடி விமான நிலைய இயக்குனராக பொறுப்பேற்றுள்ளார்.