தூத்துக்குடி அருகே கிணற்றில் மிதந்த மூதாட்டி சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி அருகே உள்ள செட்டியூரணி, நடுத்தெருவைச் சேர்ந்தவர் குருசாமி ரேணுகா தேவி (70), இவர் இன்று காலை 7 மணிக்கு வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். பல நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில், மேலதட்டப்பாறை செல்லும் ரோட்டில் உள்ள ஒரு பழைய கிணற்றில் அவர் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து தட்டப்பாறை இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிந்து, ரேணுகா தேவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது தவறி விழுந்து இறந்தாரா என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.