தூத்துக்குடி: பைக் மீது கார் மோதி ஒருவர் பலி

66பார்த்தது
தூத்துக்குடி: பைக் மீது கார் மோதி ஒருவர் பலி
தூத்துக்குடியில் பைக் மீது கார் மோதி காயமடைந்தவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். தூத்துக்குடி கோரம்பள்ளம் அந்தோணியார் புரத்தைச் சேர்ந்தவர் பிலேந்திரன் மகன் தொம்மைராஜ் (45), கூலித் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் (டிசம்பர் 23) இரவு தூத்துக்குடி - பாளை ரோடு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மோட்டார் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த ஒரு கார் இவரது பைக் மீது மோதியது. 

இவ்விபத்தில் தூக்கி வீசப்பட்டு தொம்மைராஜ் பலத்த காயமடைந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு, உடனடியாக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் தொம்மைராஜ் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்த புதுக்கோட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வனசுந்தர் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி