சென்னை யிலிருந்து தூத்துக்குடி விமான நிலையம் வந்த முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மௌன விரதம் இருந்து வழிபடுவதற்காக வந்துள்ளார். அங்கு அவரது ஆதரவாளர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இருப்பினும், செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் அவர் காரில் திருச்செந்தூர் கோவிலுக்கு புறப்பட்டார்.