தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (03. 11. 2025) திங்கள் கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. க. இளம்பகவத், இ. ஆ. ப. , அவர்கள் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டார். மாற்றுத்திறனாளிகள் உட்பட பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் குறைகள் மற்றும் நலத் திட்டங்கள் தொடர்பான மனுக்களை சமர்ப்பித்தனர். மனுக்கள் உடனடியாகப் பரிசீலிக்கப்படும் என ஆட்சித்தலைவர் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.