சாத்தான்குளம் அருகே புத்தன்தருவை கிராமத்தில், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மெட்டில்டாவின் கணவர் ஜேம்ஸ் சித்தர் (54) அதே பகுதியைச் சேர்ந்த ஜேக்கப் என்பவரால் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தாயாரை சந்தித்துவிட்டு வீடு திரும்பியபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. காயமடைந்த ஜேம்ஸ் சித்தரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து தட்டார்மடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.