தூத்துக்குடி மில்லர்புரம் புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்ற தனியார் வேலைவாய்ப்பு முகாமில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்றனர். சமீபத்தில் தொடங்கப்பட்ட வின்பாஸ்ட் கார் தொழிற்சாலைக்கு பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டதால் இளைஞர்கள் குவிந்தனர். தி. மு. க. துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம். பி. முகாமில் தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். இந்த முகாமில் 121 நிறுவனங்கள் பங்கேற்றன. மொத்தம் 762 பேருக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டது, 369 பேர் 2-ம் கட்ட நேர்காணலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். சமூகநலன் அமைச்சர் கீதாஜீவன், மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.