எக்ஸ்பிரஸ் ரயில் நின்று செல்ல வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்

5பார்த்தது
திருச்செந்தூர் - திருநெல்வேலி ரயில் பாதையில் உள்ள செய்துங்கநல்லூர் ரயில் நிலையத்தில், கொரோனா காலத்திற்குப் பிறகு நிறுத்தப்படாமல் சென்ற பாலக்காடு விரைவு ரயில் மீண்டும் நின்று செல்லக் கோரி, அப்பகுதி பொதுமக்கள், வியாபாரிகள், ஆட்டோ, வேன் ஓட்டுநர்கள் மற்றும் பெண்கள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் செய்துங்கநல்லூர் பஞ்சாயத்து அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ரயில் மீண்டும் நின்று செல்ல வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

தொடர்புடைய செய்தி