தூத்துக்குடியில் ஆணவக்கொலை: 4வது நாளாக போராட்டம்

84பார்த்தது
தூத்துக்குடியில் ஆணவக்கொலை: 4வது நாளாக போராட்டம்
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த இளைஞர் கவின் ஆணவக் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் நான்காவது நாளாக இன்று தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கவின் படுகொலைக்கு காரணமாக இருந்த குற்றவாளியின் பெற்றோரை கைது செய்தால் மட்டுமே உடலை வாங்குவோம் எனக்கூறி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அந்த கிராமத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி