காற்றாலை நிறுவனத்துக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம்!

0பார்த்தது
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகாவின் மேல பூவானி கிராமத்தில், குளத்திற்கு நீர் வரும் ஓடை பாதையை ஆக்கிரமித்து தனியார் கிரீன் லீப் காற்றாலை நிறுவனம் பாதை அமைப்பதாக கூறி கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஓடை பாதை தடை செய்யப்பட்டதால், குளத்தில் நீர் சேராமல் 600 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் நெல், உழுந்து, சோளம் உள்ளிட்ட பயிர்கள் பயிரிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டினர். இதையடுத்து 200-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள், இளைஞர்கள் ஓடையில் இறங்கி குடியேறி சமைத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காற்றாலை நிறுவனம் பணியை நிறுத்த வேண்டும்; ஓடை வழியைக் காப்பாற்ற வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.