ஸ்ரீவைகுண்டம் வடகால் பாசனப் பகுதிகளில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக பயிர்கள் கருகும் நிலையில் உள்ளதால், கூடுதல் நீர் திறக்க கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் புதுக்கோட்டையில் சாலை மறியல்
போராட்டம் நடத்தியது. அரசு வாக்குறுதி நிறைவேறாததை கண்டித்து நடந்த இந்த போராட்டத்தில், 30 பெண்கள் உட்பட 51 விவசாயிகள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.