லாரி உரிமையாளரை தாக்கிய ரவுடி கைது!

346பார்த்தது
லாரி உரிமையாளரை தாக்கிய ரவுடி கைது!
தூத்துக்குடி அருகே, வடகிழக்கு தெருவைச் சேர்ந்த லாரி உரிமையாளர் பாரத் (33) என்பவர், புதிய துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் சென்றபோது, குடிபோதையில் இருந்த டிரைவர் மூசா முகமதுகாசிம் (27) லிப்ட் தர மறுத்ததால் ஆத்திரமடைந்து, பாரத்தின் லாரி மீது கல் எறிந்து கண்ணாடியை உடைத்துள்ளார். மேலும், தட்டிக் கேட்ட பாரத்தை ஸ்பேனரால் தாக்கி கொலை செய்ய முயன்றதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தெர்மல்நகர் காவல் நிலையத்தில் பாரத் அளித்த புகாரின் பேரில், சப்-இன்ஸ்பெக்டர் அய்யம்பிள்ளை வழக்குப்பதிவு செய்து, இன்ஸ்பெக்டர் ஷோபாஜென்சி நடத்திய விசாரணையில், பிரபல ரவுடியான மூசா முகமதுகாசிம் கைது செய்யப்பட்டார். இவர் மீது ஏற்கனவே 8 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

தொடர்புடைய செய்தி