சாத்தான்குளம் தந்தை–மகன் வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு

0பார்த்தது
சாத்தான்குளம் தந்தை–மகன் வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு
நாடு முழுவதும் அதிர்வலை ஏற்படுத்திய சாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழப்பு வழக்கில், மதுரை மாவட்ட நீதிமன்றம் மார்ச் 23ஆம் தேதி தீர்ப்பு வழங்கும் என அறிவித்துள்ளது. 2020ல் வியாபாரி ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் போலீஸ் விசாரணைக்குப் பிறகு உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மத்திய புலனாய்வுத் துறை (CBI) விசாரித்து வருகிறது. அப்போதைய ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 9 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். சுமார் 6 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த வழக்கில் 100க்கும் மேற்பட்ட சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளனர். ஜாமீன் மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, இறுதி வாதங்கள் முடிவடைந்துள்ளன.

தொடர்புடைய செய்தி