தூத்துக்குடி மாவட்டம் பொட்டலூரணி கிராமத்தில் மீன் கழிவு ஆலைகளை மூடக் கோரி 400 நாட்களுக்கும் மேலாக பொதுமக்கள் போராடி வருகின்றனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.