சீர்மரபினர் நல வாரியம் - இணையதள வழி விண்ணப்பம் அறிமுகம்

289பார்த்தது
சீர்மரபினர் நல வாரியம் - இணையதள வழி விண்ணப்பம் அறிமுகம்
தூத்துக்குடி ஆட்சியர் விஷு மகாஜன் அறிவிப்பின்படி, சீர்மரபினர் நல வாரியத்தில் உறுப்பினர் பதிவு மற்றும் நலத்திட்ட உதவிகளை www.dncwb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் இனி எளிதாகப் பெறலாம். சீர்மரபினர் இனத்தைச் சார்ந்த, 18 முதல் 60 வயதுக்குட்பட்ட, அமைப்பு சாரா தொழிலாளர்கள், நிலமற்ற விவசாய கூலிகள், உடலுழைப்பு தொழிலாளர் குடும்பத்தினர் இந்த இணையதள வசதியைப் பயன்படுத்தலாம். விபத்து ஈட்டுறுதி, இயற்கை மரணம், ஈமச்சடங்கு, கல்வி, திருமணம், மகப்பேறு, மற்றும் முதியோர் ஓய்வூதியம் போன்ற உதவிகள் இதன் மூலம் கிடைக்கும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை அணுகலாம்.

தொடர்புடைய செய்தி