ஸ்ரீவைகுண்டத்தில் பிறந்த இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு மறைவு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இளம் வயதிலேயே கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இணைந்து, நிலமற்ற விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்காக பல போராட்டங்களை முன்னெடுத்தார். தாமிரபரணி ஆற்றைப் பாதுகாக்கவும் மணல் கொள்ளைக்கு எதிராகவும் போராடியவர். எளிமையான வாழ்க்கை முறைக்காக அறியப்பட்ட அவர், பெற்ற பரிசுத் தொகைகளையும் நலிந்தவர்களுக்கும் கட்சிக்கும் வழங்கினார். அவருக்கு ‘தகைசால் தமிழர்’ உள்ளிட்ட பல விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. அவரது மறைவு ஸ்ரீவைகுண்டம் மக்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.