மணல்மேடான ஸ்ரீவைகுண்டம் அணை – விவசாயிகள் கோரிக்கை!

3பார்த்தது
மணல்மேடான ஸ்ரீவைகுண்டம் அணை – விவசாயிகள் கோரிக்கை!
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி அணை பல ஆண்டுகளாக தூர்வாரப்படாததால், மணல்மேடாக மாறி நீர்த்தேக்கும் திறன் குறைந்துள்ளது. இதனால், மழைநீர் வீணாக கடலில் கலக்கிறது. விவசாய நிலங்களுக்கு தேவையான பாசன நீர் கிடைக்காமல், முன்பு மூன்று போக சாகுபடி செய்த விவசாயிகள் தற்போது ஒரே போகத்துக்கு மட்டுமே நீர் பெறுகின்றனர். நிலத்தடி நீரும் குறைந்துள்ளதாக கூறும் விவசாயிகள், அணையை விரைவில் தூர்வாரி அதன் முழு திறனை மீட்டெடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி