தூத்துக்குடி-நாசரேத் திருமண்டலத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நாசரேத்தில் உள்ள தூய யோவான் பேராலயத்தில் கடந்த 16ஆம் தேதி நடைபெற்றது. ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஜோதிமணி தலைமையில் நடைபெற்ற தேர்தலில், மோசஸ் ஜெபராஜ் (உபதலைவர்), டி. ஜி. ஏ. தாமஸ் (குருத்துவ செயலர்), எஸ். டி. கே. ராஜன் (லே செயலர்), டி. கே. எம். ஜான்சன் டேவிட் (பொருளாளர்) ஆகியோர் பதவியேற்றனர். இந்த பதவியேற்பு விழா சி. எஸ். ஐ. வழிகாட்டுதலின்படி, பிரதம பேராயரின் ஆணையாளரும் பொறுப்பு பேராயருமான ஐசக் வரபிரசாத் முன்னிலையில் இனிதே நடைபெற்றது.