திருச்செந்தூரில் உள்ள முத்தாரம்மன் கோவிலில் கொடை விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவின் ஒரு பகுதியாக அபிஷேகம், தீபாராதனை, பால்குடம், தட்டு பிரசாதம் மற்றும் வீதி உலா போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடன்களை செலுத்தினர். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை சைவ வேளாளர் சங்க நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.