யுனைட்டடு ஸ்டேட்ஸ் ஆப் அமெரிக்காவைச் சேர்ந்த 'லுக்' என்ற தனியார் நிறுவனம் இந்தியாவில் புனேயில் இன்டர்நேஷ்னல் டெக் பார்க்கில் கிளை நிறுவனத்தை நிறுவி செயல்படுத்தி வருகிறது.
இந்த நிறுவனத்தின் சமூக பொறுப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் மிகவும் ஏழ்மையான நிலையிலுள்ள ஏழை-எளிய மக்களுக்கு அறுசுவை உணவுடன், அரிசி, பருப்பு, காய்கறி உள்ளிட்ட தேவையான மளிகைப் பொருட்கள் நலத்திட்ட உதவித் தொகுப்புகளாக வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி, தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள கால்வாய் கிராமத்தில் ஏழை-எளியவர்களுக்கு அறுசுவை உணவுடன் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.
விழாவிற்கு, லுக் நிறுவனத்தின் பயிற்சி உதவியாளர் அமுதா தலைமை வகித்து தங்கள் நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். நிறுவன பொறுப்பாளர்கள் பெருமாள், அந்தோணி ஜெகன்ராஜ், தேவதாஸ், மருதகனி, சித்ரா, மதுஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொறுப்பாளர் வினோதினி சரிதா அனைவரையும் வரவேற்றார்.
விழாவில், தேர்வு செய்யப்பட்டிருந்த பயனாளிகளுக்கு கால்வாய் ஊர்ப்பிரமுகர் ராமச்சந்திரன்-புஷ்பம் தம்பதியினர் அறுசுவை உணவுடன், அரிசி, காய்கறி, பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கினர்.