தூத்துக்குடி திருமண்டல சுற்றுச்சூழல் துறை சார்பில் உலக தண்ணீர் தினம்

73பார்த்தது
தூத்துக்குடி திருமண்டல சுற்றுச்சூழல் துறை சார்பில் உலக தண்ணீர் தினம்
தூத்துக்குடி - நாசரேத் திருமண்டலம் சுற்றுச்சூழல் கரிசனைத் துறையின் சார்பாக உலக தண்ணீர் தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு நங்கைமொழி ஆர்த்திக் ராஜா தலைமை தாங்கினார். சுற்றுச்சூழல் கரிசனை துறை இயக்குனர் ஜான் சாமுவேல் தண்ணீரை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். தண்ணீர் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை குறித்து விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் இறுதியில் நாசரேத் ஜஸ்டின் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் அபிஷன், ராய்ஸ்டன், ஜூபல், ஸ்டெபான், தயான், தன்னார்வலர்கள் கலந்து கொண்டார்கள். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை தூத்துக்குடி நாசரேத் திருமண்டல சுற்றுச்சூழல் கரிசனைத் துறை இயக்குனர் ஜான்சாமுவேல் செய்திருந்தார்.

தொடர்புடைய செய்தி