தென்காசி: கணவனை கொலை செய்த மனைவி; 3 பேருக்கு ஆயுள் தண்டனை

53பார்த்தது
தென்காசி: கணவனை கொலை செய்த மனைவி;  3 பேருக்கு ஆயுள் தண்டனை
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வாசுதேவநல்லூர் பசும்பொன் தெருவை சேர்ந்தவர் கருப்பசாமி. இவரை கடந்த 2013 ஆம் ஆண்டு கொலை செய்த வழக்கில் அவரின் மனைவியான மகேஸ்வரி, மற்றும் பசும்பொன் தெருவை சேர்ந்த பொன்னையா என்பவர் மகன் மாரியப்பன் மாரிசாமி(70), இல்லத்துப் பிள்ளைமார் தெருவை சேர்ந்த சிவசுப்பிரமணி என்பவர் மகன் பொன்ராஜ் (50) ஆகியோரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை யானது தென்காசி முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் வழக்கை விசாரணை செய்த நீதிபதி ராஜவேலு நேற்று கணவனை கொலை செய்த மனைவி உட்பட மூவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு சார்பில் வழக்கறிஞர் மருதப்பன் ஆஜரானார். வழக்கில் திறம்பட விசாரணை செய்து, சாட்சிகளை விரைவாக ஆஜர்படுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுத்த வாசுதேவநல்லூர் காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி