தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் உள்ள முத்தாரம்மன் கோவில் தலைமை அர்ச்சகர் குமார் பட்டர் கடந்த ஜூன் 16 அன்று உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது குடும்பத்தினர் நெல்லை சென்றிருந்தபோது, வீட்டின் பீரோவை உடைத்து 107 பவுன் தங்க, வைர, வெள்ளி நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். சுமார் 53½ லட்சம் ரூபாய் மதிப்புள்ள இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்குப்பதிந்து, கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.