சென்னைக்கு கூடுதலாக ரயில் இயக்க வேண்டும்: சமக கோரிக்கை!

544பார்த்தது
சென்னைக்கு கூடுதலாக ரயில் இயக்க வேண்டும்: சமக கோரிக்கை!
தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகத்தின் செயற்குழு கூட்டம் மாவட்ட அவைத்தலைவர் கண்டிவேல் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், தூத்துக்குடி-சென்னை இடையே இயங்கும் ஒரே அதிவிரைவு ரயில் சேவையால் மக்கள் சிரமப்படுவதாகவும், எனவே கூடுதல் ரயில் சேவை தொடங்க வேண்டும் என்றும், தூத்துக்குடியில் இருந்து வந்தே பாரத் ரயில் இயக்கப்பட வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. மாநில தொழிற்சங்க செயலாளர் ஜெபராஜ் டேவிட் கட்சியின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து உரையாற்றினார். கூட்டத்தில் மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ், நாடார் பேரவை தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் அருண் சுரேஷ் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.