தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகனேரி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பேயன்விளை பகுதியில் ரோந்து சென்ற போலீசார், சந்தேகத்திற்கிடமாக நின்ற ஜாபர் சாதிக் என்பவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர் காயல்பட்டினம் உச்சினிமாகாளி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சம்சுதீன் மகன் ஜாபர் சாதிக் (45) ஆட்டோ டிரைவர் என்பதும், அவரிடம் 125 கிராம் கஞ்சா இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.