தூத்துக்குடி மாவட்டத்தில், அய்யா வைகுண்டசுவாமி 194வது அவதார தினத்தை முன்னிட்டு, மாசி மாதம் 20-ம் தேதி (04.03.2026) புதன்கிழமை அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை அத்தியாவசியப் பணிகளில் ஈடுபடும் பணியாளர்களுக்குப் பொருந்தாது. விடுமுறைக்கு ஈடாக, 14.03.2026 அன்று இரண்டாம் சனிக்கிழமை அலுவலக நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.