எட்டையாபுரம் அருகே கார் தீ விபத்து – 4 பேர் உயிர்தப்பினர்

381பார்த்தது
எட்டையாபுரம் அருகே கார் தீ விபத்து – 4 பேர் உயிர்தப்பினர்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த பாலாஜி தனது மூன்று நண்பர்களுடன் மதுரையிலிருந்து காரில் திரும்பிக் கொண்டிருந்தபோது, எட்டையாபுரம் அருகே குமாரகிரி பகுதியில் கார் இன்ஜினில் இருந்து திடீரென புகை எழுந்தது. உடனடியாக காரை நிறுத்தியதும் தீப்பிடித்து எரிந்தது. அனைவரும் உடனடியாக காரில் இருந்து இறங்கி உயிர் தப்பினர். தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தாலும், கார் முழுவதும் எரிந்து சேதமடைந்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி