தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்த கோவிலில் குடமுழுக்கு விழா வரும் 7ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனிடையே, திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு நேரத்தை நண்பகலுக்கு மாற்றக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஏற்கனவே இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் தலையிட முடியாது என்று தெரிவித்து, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.