பழுதான ஸ்பீக்கர் விற்ற நிறுவனத்திற்குஅபராதம்: நீதிமன்றம்

197பார்த்தது
பழுதான ஸ்பீக்கர் விற்ற நிறுவனத்திற்குஅபராதம்: நீதிமன்றம்
தூத்துக்குடியைச் சேர்ந்த கார்த்திக் ராஜா என்பவர் ஆன்லைனில் ரூ. 26,999க்கு வாங்கிய ஸ்பீக்கர் பழுதடைந்ததால், நிறுவனத்தின் மீது நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த ஆணையத் தலைவர் சக்கரவர்த்தி மற்றும் உறுப்பினர்கள் சங்கர், நமச்சிவாயம் ஆகியோர், முறையற்ற வணிக நடைமுறையைப் பின்பற்றியதாகக் கூறி, பொருளின் மதிப்பு ரூ. 27,000, சேவைக் குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்கான நஷ்ட ஈடு ரூ. 20,000, வழக்குச் செலவு ரூ. 10,000 என மொத்தம் ரூ. 57,000 தொகையை 6 வார காலத்திற்குள் வழங்க உத்தரவிட்டனர்.

தொடர்புடைய செய்தி